--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!

8

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

சமூக அறிவியல் ஆசிரியர் ராம்ராஜ் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் 13 மாணவிகளிடம் இரட்டை பொருள்பட பேசுதல், தொட்டு பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் ஆசிரியர் ராம்ராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இப்பிரச்சனையில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பட்டை தேடி வருகின்றனர். இந்த பிரச்சினையில் துறை ரீதியான நடவடிக்கையாக ஆசிரியர்கள் ராமராஜ், ஆல்பர்ட் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon