--- --:--:-- --

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய்..!

3

தமிழகத்தில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 104 கோடியை 67லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இணையதளம் மூலம் கடந்த 26ஆம் தேதி வரை இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்த 42,671 பேரில் 20 ஆயிரத்து 934 பேரின் விண்ணப்பங்கள் தலா 50,000 ரூபாய் வீதம் 104 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 17, 863 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல 375 முன் களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 93 கோடியே 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கொரொனாவால் பெற்றோரை இழந்த 1,483 குழந்தைகளுக்கு 207 கோடி ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon