--- --:--:-- --

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை..!

2

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியில் முன்பகை காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மகேந்திரவாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரின் இரு குடும்பத்தினருக்கும் காதல் பிரச்சினை காரணமாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அருண் சக்திவேல் மீது பேருந்தை மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும், வாகனத்தை கொண்டு வீட்டின் முன்பகுதியை இடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் துரத்தி சென்று கத்தியால் சரமாரியாக தாக்கியதில் சக்திவேல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon