--- --:--:-- --

அரசு பள்ளி மாணாக்கரை சாதிப் பெயரை கூறி திட்டியதாக புகார்..!

1

திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளை ஜாதி பெயரை கூறி திட்டி கழிவறைகளை சுத்தம் செய்ய செல்வதாக எழுந்த புகாரில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை கீதா மாணவ மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

 

அப்பொழுது கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும் சாதி பெயரை கூறி தலைமையாசிரியை திட்டுவதாகவும் மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க புகார் கூறியதாக தெரிகிறது. புகார் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அறிக்கை தயார் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon