குரங்கை காப்பாற்றிய கார் ஓட்டுநரை பாராட்டிய முதலமைச்சர்..!
காட்டுக்குள் இருந்து உணவு தேடிவரும் வனவிலங்குகளை யாரும் துன்புறுத்தாதீர்கள் எனக்கூறி குரங்கை காப்பாற்றிய பெரம்பூர் கார் ஓட்டுநர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் சமத்துவபுரம் கிராமத்தில் நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை தனது மூச்சை கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுநர் பிரபுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வரவழைத்து பாராட்டினார்.
மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வட்டாட்சியர் துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





