11 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 11 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் செயலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்த 47 வயதான முரளிதரன் என்பவர் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது.
மேலும் மாணவிகளை தவறான முறையில் தொடுவது உள்ளிட்ட பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் வரலாற்று ஆசிரியர் முரளிதரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.





