வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா ..!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மேலும் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த மேலும் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 9 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதித்தவர்கள் தொடரில் இருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.





