--- --:--:-- --

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம்..!

1

மேட்ரிமோனியல் தளம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்த நித்ய லட்சுமி என்பவருக்கும், கோவையை சேர்ந்த விஜயகுமாருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 

இவர்களுக்கு எட்டு மாதத்தில் ஆண் குழந்தை உள்ள நிலையில் பணி நிமித்தமாக வெளியூர் சென்ற விஜயகுமார் வீடு திரும்பவில்லை. அவர் குறித்து விசாரித்தபோது வில்லிவாக்கத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஜயகுமார் அவரை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

 

மேட்ரிமோனியில் இணையதளத்தில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்து அதில் சிக்கும் பெண்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நித்திய லட்சுமி தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்ட பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon