ஆவிகள் உலாவும் பிரதமர் வீடு..!
ஆவிகள் குடியிருப்பதாக கூறப்படும் 9 ஆண்டுகள் பூட்டி கிடந்த பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் ஜப்பான் பிரதமர் குஷிதா தைரியமாக இரவு தங்கியது ஜப்பானில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமரின் அலுவலகம் இருக்கும் அதே காம்பவுண்டில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும் இருக்கிறது. 1930களில் ஜப்பானில் நடந்த ராணுவ சதியின் போது அப்போதைய பிரதமர் சுபயோசி என்பவரும், மூத்த அரசு அதிகாரிகளும் இந்த வீட்டில் வைத்து கொல்லப்பட்டனர்.
அதற்கு நான்கு வருடங்கள் கழித்து இந்த வீட்டில் வைத்து மீண்டும் ஒரு ராணுவ சதி ஒன்று அரங்கேறியது. அதற்குப் பிறகு ஜப்பானில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வந்த பின்னர் பல பிரதமர்கள் இந்த வீட்டில் வசித்துள்ளனர். 2011-2012 காலகட்டத்தில் பிரதமராக இருந்த யோசிஹுகா நோட்டா என்பவர் இந்த வீட்டில் கடைசியாக வசித்த பிரதமரும் ஆவார்.
அப்போது இருந்தே இந்த வீட்டில் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் உலவுவதாக வதந்திகள் வந்தன. ஆவிகளை மீறி இந்த வீட்டுக்கு வருகை தந்த சிலரை ஆவிகள் வேட்டையாடியதாகவும் கதைகள் பரவின. பிரதமராக இருந்தாலும் ஆவிகளை கண்டு பயப்படாமல் இருக்க முடியுமா? இதற்கு முன்னாள் பிரதமராக இருந்த சின்ஷோ அபே ஆகியோர் இந்த வீட்டில் வசிக்க முன்வராமல் தயங்கினர்.
எனவே ஒன்பது ஆண்டுகளாக பிரதமரின் வாசம் இன்றி இந்த வீடு பூட்டியே கிடந்தது. ஆவி பிரச்சினை காரணத்தால் பிரதமர் யோசிஹுடே சுதா பதவிக்காலம் முழுவதும் உள்ள குடியிருப்பில் வசித்தார். சின் சோ அபே அதிகாரப்பூர்வ இல்லத்தில் பக்கம் போவதையே தவிர்த்து விட்டு டோக்கியோவில் சொந்த வீட்டில் வசித்தார்.
ஆனால் இப்போது பிரதமராக வந்துள்ள குக்ஷிதாவுக்கு ஆவி மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறப்படுகிறது. அதனால் அவர் அங்கு சென்று தங்கியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





