--- --:--:-- --

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன..?

4

தமிழகத்தில் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டும் சுழற்சி முறை இன்றி பள்ளிகள் இயல்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்பட அனுமதி கொடுத்துள்ளது.

 

ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. சமூக கலாசார அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும். அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதி, கடைகளில் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்டு கட்டாயம். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon