--- --:--:-- --

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு : பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்

6

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெற்ற பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில தேர்வில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் தொடர்பாக கொடுத்து விடையளிக்கும் பகுதியில் இடம்பெற்றிருப்பது பொதுவாக பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றதால் சர்ச்சையானது.

 

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்பு கண்டனம் எழுந்தது. இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்கள் உரிமைகளுக்கு எதிரான இதுபோன்ற கேள்விகள் இனி எப்பொழுதும் வினாத்தாளில் இடம் பெறக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

 

இதன் பிறகு காங்கிரஸ் எம்பிக்கள் தங்களுடைய இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கை தட்டினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

 

Right Menu Icon