--- --:--:-- --

பள்ளியில் 9 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கொரொனா ..!

3

ந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது.

 

கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவ, மாணவியர் கல்வி கற்று வருகின்றனர். இதில் பள்ளியில் படித்து வரும் மாணவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொரொனா வைரஸ் தொற்று பரிசோதனை ச உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

 

இதில் 9 மாணவர்கள் உட்பட பள்ளிகளில் பணிபுரியும் 15 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளியை மூட உத்தரவிட்டு உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon