ஆன்லைன் மீடியாவை கண்காணிக்க தனி நபர் ஆணையம்..!
ஆன்லைன் மீடியாக்களை முறைப்படுத்தும் முறைப்படுத்துவது குறித்த தனிநபர் ஆணையம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை மாவட்ட பேரூராட்சிகள், சூலூர் விமானப்படைத் தளம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 185 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதில் முதல்வர் உடன் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்என்ஐ வாங்கிக்கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் இருக்கும் பத்திரிக்கை நிறுவனங்கள் குறித்த புகார் அளித்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் நல வாரியம் விரைவில் முழு செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





