மோடி, அமித்ஷா, பிரியங்கா சோப்ராவிற்கு கொரோனா பரிசோதனை..!
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பிரியங்கா சோப்ராவிற்கு கொரொனா பரிசோதனை செய்ததாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் போலி பட்டியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஆர்டிபிசிஆர் கொரொனா பரிசோதனை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திரைப்பிரபலங்கள் அக்ஷய்குமார், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுக்கு கொரொனா சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் அந்த போலி தகவல் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் பீகார் மாநில சுகாதாரத் துறையை விமர்சித்து வருகின்றனர். தவறுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.







