நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா..!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சசிகலா நேரில் சந்தித்தார். அண்மையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்ததாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு சசிகலாவை வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது லதா ரஜினிகாந்த் உடன் வந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





