தமிழ்நாட்டில் இதுவரை 8 விமான பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்த 65 வயதான நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஓமிக்ரான் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





