--- --:--:-- --

தமிழகம் வந்த 3 பயணிகளுக்கு கொரோனா உறுதி..!

1

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று பயணிகளுக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் அவர்களுக்கு ஓமிக்ரான் தொற்றா என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் மரபியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கும், பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிகளில் ஒரு சிறுமிக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த மேலும் ஒரு பயணி ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இவர்களுக்கு ஓமிக்ரான் கொரொனாவா என்பதை அறிய இவர்களின் மரபியல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் உறுதியானால் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையங்களில் அபாயகர நாடுகள் பட்டியலில் உள்ள 17 நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல், பரிசோதனை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon