--- --:--:-- --

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கும் பரவிய ஒமைக்ரான்..!

1

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் ஒமைக்ரான் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 19ஆம் தேதி மலேசியாவுக்கு வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக மலேசிய அரசு கூறியுள்ளது.

 

இது குறித்து தென் ஆப்பிரிக்கா ஆய்வாளர்கள் உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்கு முன்னதாகவே இவர் மலேசியாவிற்கு வந்துள்ளார். நவம்பர் மாதம் மலேசியா வருகை தந்தவர்களில் தொற்றுக்கு ஆளானவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது பாதிப்பு இருந்தது தெரியவந்திருப்பதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

 

இதேபோல தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்குமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியுயார்க் கலிபோர்னியா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon