முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கும்முன் எச்சரிக்கை செய்ய வேண்டும்.!
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
டிசம்பர் இரண்டாம் தேதி அதிகாலை 3 மணிக்கு அறிவிப்பில்லாமல் அணை திறக்கப்பட்டதாகவும், இதனால் சில வீடுகளில் நீர் சூழ்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை செய்யவும், பகல் நேரங்களிலேயே நீர் திறக்கவும் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.






