ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது..!
ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளதாக தென்னாபிரிக்கா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெரும் இழப்பை ஏற்படுத்திய டெல்டாவைக் காட்டிலும் அதிக வீரியம் கொண்டது என உலக நல்வாழ்வு அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒமிக்ரான் தொற்றால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் மனித உடலில் பரவி சிறிது காலம் தங்கிய பிறகே மனிதர்கள் நோய்வாய்படுவதாகவும், இதனால் வைரசின் உண்மையான தாக்கத்தை கண்டறிவதில் சிக்கல் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.






