--- --:--:-- --

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தற்கொலை..!

1

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

2019ஆம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தவர் வெங்கடாச்சலம். ஓய்வுபெறும் நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி வெங்கடாசலத்தின் வீடு அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 

சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15 கிலோ சந்தனக் கட்டைகள் பிடிபட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வெங்கடாசலத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்தநிலையில் வேளச்சேரி ந தலைமை செயலக காலனி வீதியில் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்று உடலை மீட்டு காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon