காதலன் வேறு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பியதால் காதலி தற்கொலை..!
அண்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் இங்கு ஆவடி சாலையில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் வித்யா தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அருகில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்று வருவாதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்தபோது வித்யா மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்தார். டிபி சத்திரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சோதனை செய்து பார்த்ததில் ,வித்யாவும் ஸ்ரீராமும் காதலித்து வந்ததும் அதன் பிறகு ஸ்ரீராம் வித்யாவைவிட்டு வேறு பெண்ணுடன் நெருக்கமாக, வேறு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை வித்தியாவிற்கு அனுப்பி அவரை மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
வேறு பெண்ணுடனான புகைப்படங்களை வித்தியாவின் வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த நித்யா இறப்பதற்கு முன்னதாக என் சாவுக்கு நீதான் காரணம் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.






