--- --:--:-- --

கணவனின் துன்புறுத்தலால் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்..!

8

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குடிகார கணவனின் துன்புறுத்தலால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர்கள் சமாதானம் பேசி காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் குடி போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் நிலையில் ஆனந்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றும் தகராறு நடக்கவே ஆத்திரமடைந்த மல்லிகா வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

 

மல்லிகா ஆற்றில் இறங்குவதை கண்டு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பாலமுருகன், ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து மல்லிகாவிடம் சமாதானம் பேசி இடுப்பளவு தண்ணீரில் இருந்து அவரை மீட்டு கொண்டு வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon