ரோபோக்கு முகம் கொடுத்தால் ரூ.1.5 கோடி பரிசு..!
ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரி பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமை வழங்கப்படும் என அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
மனித உழைப்பையும் தாண்டி தற்போது பல்வேறு நாடுகளில் ரோபோக்களை தயாரிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் ரோபோக்களுக்கு தங்களுடைய முக மாதிரியை பயன்படுத்தி அனுமதித்தால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரோமோபோட் நிறுவனம் அறிவித்துள்ளது.






