300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து பலி..!
300க்கும் மேற்பட்ட பாம்புகளிடம் இருந்து மக்களை காத்த பாம்பு பிடிப்பவர் மது போதையில் பாம்பை பிடித்ததால் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ்.
பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பாதுகாப்பான பகுதியில் விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மதுபோதையில் இருந்த அவர் வழக்கமாக பாம்பு பிடித்தாலும் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதில் அலட்சியம் காட்டியுள்ளார். சுமார் ஐந்து முறை பாம்பு கடித்ததனால் விஷம் தலைக்கேறிய நிலையில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.






