--- --:--:-- --

காலனி ஆதிக்க மனப்பான்மை இன்னும் மறையவில்லை எனக்கூறிய பிரதமர்..!

1

உலகில் காலனி ஆட்சிக்காலம் முடிந்துவிட்டாலும் காலனி ஆதிக்க மனப்பான்மை இன்னும் மறையவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உச்சநீதி மன்றம் ஏற்பாடு செய்த அரசியல் அமைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

 

அப்போது பேசிய அவர் ஒரு காலத்தில் தங்க பறவையாக இருந்த தேசம் அந்நியர்களின் படையெடுப்புகளால் வறுமை, பஞ்சம் நோய் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. அதிலிருந்து மீள்வதற்கு நாடு சுதந்திரம் பெற்றதும் அரசியலமைப்பு பெரிதும் உதவியதாக தெரிவித்தார்.

 

சுதந்திரத்திற்கு பிறகும் கோடிக்கணக்கான மக்கள் கழிவறை வசதி கூட பெறாமல் தவித்ததாகவும் பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டு கிடந்ததாகவும் பிரதமர் கூறினார்.

 

ஆனால் அரசியலமைப்பின் உதவியால் இந்த இக்கட்டான நிலையை தேசம் கடந்து வந்து விட்டதாகவும் இரண்டாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வழங்கிய தேசமாக இந்தியா திகழ்கிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

 

உலகின் காலனி ஆட்சிக்காலம் முடிந்துவிட்டாலும் காலனி ஆதிக்க மனப்பான்மை இன்னும் மறையவில்லை எனவும், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு இந்த காலணி ஆதிக்க மனப்பான்மை உடைய சக்திகள் பெரும் தடையை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon