கடலில் இழுத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர் உடல் கரை ஒதுங்கியது..!
கோவளம் கடலில் குளிக்கச் சென்று சடலமாக கரை ஒதுங்கிய இந்திய கடற்படை வீரரின் உடலை மாமல்லபுரம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடற்படையில் பணியாற்றி வரும் சுரேஷ் கோவளம் கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது கடலில் குளிக்கும் போது கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
மீனவர்கள் தேடியும் கடற்படை வீரர் கிடைக்காத நிலையில் இன்று காலை முதல் கடற்படை மற்றும் விமானப் படையினர் கோவளம் கடற்கரையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவரது உடன் மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.






