அம்மன் வேடத்தில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம்..!
நடிகை தமன்னா அம்மன் வேடமிட்டு வாழையிலையில் உணவு சாப்பிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழில் தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் தமன்னா.
தமன்னா வாழையிலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து வாழை இலையில் உணவு சாப்பிடுவது கடவுளைப் போல உணர வைப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வாழை இலை சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் தெரிவித்துள்ளார்.






