ஓடும் ரயில் முன் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் உயிரிழப்பு.!
ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்ஸ்களை பெறுவதற்காக பல அபாயகரமான செயல்களில் ஈடுபட்டு உயிரை இழக்க நேரிடும் சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டன.
மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் சவுரி என்பவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்க வீடியோக்களையும், போட்டோகளையும் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ரயில் முன் நிற்பது போன்று செல்பி எடுக்க முயன்றபோது ரயில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.






