இறந்த நபர் 7 மணி நேரத்திற்கு பின் உயிர்பெற்ற அதிசயம்..!
மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு 7 மணி நேரம் சவக்கிடங்கில் இருந்த நபர் உயிர்பெற்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொராதாபாத் நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் 40 வயதான இந்த நபர் வேகமாக வந்த மோட்டார் பைக்கால் மோதப்பட்டு அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் கொண்டுவரப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என அறிவித்தனர். அதை தொடர்ந்து குளிர்பதன சவ கிடங்கில் வைக்கப்பட்ட அவரது உடல் மறுநாள் கூராய்வுக்காக எடுக்கப்பட்ட பொழுது உடலில் அசைவு ஏற்பட்டதை நெருங்கிய உறவினர் கண்டுபிடித்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பல முறை சோதித்த பின் இதயத் துடிப்பு இல்லாததால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் எப்படி அவருக்கு மீண்டும் உயிர் வந்தது என்பது புதிராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






