--- --:--:-- --

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் திமுக அரசு: நலவாரிய நம்பிக்கையில் நாட்டு மருத்துவர்கள்

d

மருத்துவ உலகத்தில் இன்று எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை தேவையற்ற பரிசோதனைகள், இவை பாமர மக்களை மிகவும் பாதிக்கிறது.குறிப்பாக தரமான மருத்துவம் எட்டாக்கனியாகிவிட்டது.

 

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து மக்களுக்கு கை கொடுத்த மருத்துவம் அனுபவ மருத்துவம்தான் காரணம் சாதாரண காய்ச்சல் தலைவலி முதல் வயிற்று புண் இது போன்ற சிறிய நோய்களுக்கு கூட மனட்சாட்சி இல்லாத சில மருத்துவர்கள் விபரீதமாக நோயை சித்தரிக்கிறார்கள்.

 

ஏன் உலகத்தையே அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் இந்த நோய்களை சில நூறுகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை 2, 3 நாளில் குனமாக்கி விடுவார்கள் பாரம்பரிய மருத்துவர்கள் இப்படி சிறப்புவாய்ந்த மருத்துவம் ஆனால் இதுவே மற்ற மருத்துவத்தில் பெரிய தொகை வேண்டும் குறிப்பாக உலகமே நடுங்கும் கொரானா வை கூட 2 நாளில் எவ்வளவு கடுமையாக இருந்தாலும்  சில நுறு ரூபாயில் குணமாக்க தமிழ்நாட்டில் அநேக அனுவபாரம்பரிய மருத்துவர்கள் உண்டு.

 

ஆகவே மக்களுக்காக பாடுபடும் நமது முதல்வர் அவர்கள் ஏழைகளின் பொருளாதாரம் கருதி பாரம்பரிய அனுபவ மருத்துவம் செய்துவருபவர்களை அங்கிகரிக்க வேண்டும்.

 

சிறிய தொகையில் செலவு செய்யும் எங்கள் தமிழ் பாரம்பரிய மருத்துவம் ஏழைகளுக்கு வேண்டும் அரசு உடனடியாக பாரம்பரிய அனுபவ மருத்துவர்களை அழைத்து அவர்களை கௌரவித்து அங்கிகாரம் அளிக்க வேண்டும் என்பது மக்களின் ( ஏழைகளின்)எதிர்பார்ப்பு.

 

தமிழகத்தைப் பொருத்தவரை பாரம்பரிய அனுபவ நாட்டு மருத்துவர்கள் ஆங்காங்கே இன்னும் இருந்து கொண்டு தங்களின் புனிதமான மருத்துவ சேவையை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அந்த வகையில் ஏராளமான இந்த சித்த மருத்துவ சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தங்களது பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

 

அந்த வகையில் இட்மா என்ற பாரம்பரிய நாட்டு மருத்துவர்கள் சங்கம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது.இதை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளனர். இந்த மருத்துவர்கள் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பட்டய சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர் .மேலும் இதிலுள்ள பலர் மூலிகை ஆராய்ச்சியில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

 

இது பற்றி ஒருங்கிணைந்த நாட்டு மருத்துவர்கள் சங்க (இட்மா) பொதுசெயலாளர் பாரம்பரிய வைத்திய   நிபுணர்  Hon. DR.தேவசகாயம் அவர்களிடம் பொள்ளாச்சியில் வைத்து கேட்டோம்:-

 

அதற்கு அவர் இது சம்மந்தமாக நமது முதல்வர் அவர்கள் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் பாரம்பரிய மருத்துவர்களுக்கு நலவாரியம் அமைத்து கொடுத்து அவர்களை ஒழுங்குபடுத்தி மருத்துவம் செய்ய அனுமதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். சொன்னது போல் கொரோனா காலத்தில் ஆங்கில மருந்து கடைகளை திறப்பதுபோல் நாட்டு மருந்துகளையும் திறக்கலாம் என்று நமது கலாச்சார பாரம்பரிய மருத்துவத்திற்கு மகிமை ஆற்றினார்கள்.

 

இன்றும் நாங்கள் வாரியம் சீக்கிரம் அமைத்து தாருங்கள் என்று சுகாதார துறை அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை வைத்தோம் அவர்களும் முதல்வர் கண்டிப்பாக செய்து தருவார் என்றார்கள். இப்பொழுது  மின்சாரத்துறை அமைச்சரிடமும் எடுத்து கூறினோம். அவர்களும் முதல்வரிடமும் துறைஅமைச்சரிடமும் தெரிவிக்கிறேன் என்றார்கள்.

 

முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர்களிடமும் மனுக்கள் அளித்துள்ளோம். எங்களை பொறுத்தவரை எங்களையும் முதற்கட்டமாக ஒரு தொழிலாளியாக முதல்வர் ஏற்றுக்கொண்டார். அதற்காகவே அவர்களுக்கு எங்கம் சங்கம் சார்பில் கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

 

கண்டிப்பாக நலவாரியம் விரைவில் எங்களுக்கு அமைத்து தந்து ஏழைகள் பயனடையும்படி எங்களுக்கு வாழ்வு அளிப்பார் என்று தினம் தினம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று மனதுருக்கமுடன் கூறினர்.


“நலவாரிய நம்பிக்கையில் நாட்டு மருத்துவர்கள்

 

தமிழகத்துக்கு ஒளி கொடுக்கும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது . முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் புதல்வர் மு. க. ஸ்டாலின்  ஆட்சி பொறுப்பேற்ற உடனே அடுத்தடுத்து தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி அள்ளித் தந்து கொண்டிருப்பது தமிழக மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது .

 

இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளமாகும் என்கிற நம்பிக்கையாகவும் இருக்கிறது. அந்த வகையில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய அனுபவ பாரம்பரிய நாட்டு மருத்துவர்களுக்கான நலவாரியம் எப்போது அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.

 

நிச்சயம் இந்த அரசு நிறைவேற்றும்.நல வாரியம் அமைக்கப்பட்டால் நலமான வாழ்க்கை எங்களுக்கு மட்டுமல்ல.இந்த பலமான சமுதாய த்துக்கும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.


 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon