--- --:--:-- --

முன்னாள் மிஸ்.கேரளா,ரன்னர்ஸ் அப் விபத்தில் பலி..!

6

பார்ட்டியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதில் முன்னாள் மிஸ் கேரளா ஆன்சி கபூர் மற்றும் இரண்டாவது இடம் பிடித்த சஞ்சனா விபத்தில் சிக்கி பலியானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்தியதாக காரை ஓட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் சாலையை கடந்த 1ஆம் தேதி கார் மீது பைக் மோதுவதை தடுப்பதற்காக திரும்பியதில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதிக் கொண்டது. காரிலிருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற ஆன்சி மற்றும் இரண்டாவது பட்டம் வென்ற சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அப்துல் ரகுமான் என்பவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். காரில் இருந்த முகமது ஆசிக் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார்.

 

விபத்து நடந்த தினம் கொச்சின் ஹோட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பியபோது நடந்ததாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon