தொடர் மழை காரணமாக 28 மாவட்டங்களில் இன்று விடுமுறை..!
தொடர் மழை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர் நாமக்கல், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கரூர் மற்றும் தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல்லில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






