ஆபத்தான முறையில் ஓடையை கடக்கும் மாணவர்கள்..!
ரிஷிவந்தியம் அடுத்த தாங்கள் கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஓடையை கடந்து பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிராமத்தில் பெய்த கன மழையினால் ஏரியில் தண்ணீர் முழுவதும் வெளியேறி ஓடை வழியாக அதிகமாக செல்கிறது. இதனால் இந்த கிராமத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு நடந்து சென்று படிப்பதற்காக இந்த ஓடையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஆபத்தான இந்த பாதையை சீரமைக்க ஒரு சிறு பாலம் அமைத்து தர பள்ளி மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.






