--- --:--:-- --

அரை நிர்வாணமாக தகாத வார்த்தைகளால் பேசி காவலர்களை தாக்கிய போக்குவரத்து காவலர்..!

6

கரூரில் மது போதையில் சாலையில் அரை நிர்வாணமாக தகாத வார்த்தைகளால் பேசி காவலர்களை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாக தனியார் ஆம்புலன்ஸ் மீது வேகமாக வந்த கார் மோதி உள்ளது. காரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

சாலையில் சட்டையை கழற்றி தகாத வார்த்தைகளால் பேசிய அந்த நபர் தடுக்க வந்த காவலர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் காவலர்கள் அந்த நபரை சமாதானம் செய்ய முயன்றனர்.

 

ஆனால் அவர் தொடர்ந்து அநாகரிகமாக பேசி சாலையின் நடுவே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர் நகர போக்குவரத்து காவல் துறையில் காவலராக பணிபுரிந்து தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon