--- --:--:-- --

ஜெய்பீம் படத்தின் உண்மை நாயகிக்கு லாரன்ஸ் கட்டி கொடுக்கபோகும் வீடு..!

4

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் கதை உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த கதையில் பாதிக்கப்பட்ட ராசக்கண்ணி என்பவர் உண்மையாகவே வாழ்ந்தவர் என்பதும் அவரது மனைவி பார்வதி அம்மாள் தற்போது உயிருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் நிலையை அறிந்து வருத்தமுற்று நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

 

ஊடகவியலாளர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். மிக விரைவில் பாரம்பரியமாக வீடு கட்டி கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 28 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon