--- --:--:-- --

தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்..!

1

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பான தகவலை வெளியிட்டிருக்கும் பிரதமர் தமிழக நிலவரம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டு இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீள இருப்பதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இதற்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாநில பேரிடர் நிதியிலிருந்து கொரொனா நிவாரண பணிகளுக்கும், இதுவரை மேற்கொண்ட பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon