--- --:--:-- --

அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுத்தவர் கொடூரமாக வெட்டிக் கொலை..!

5

கோவையில் எதிர் தரப்பினரை வெறுப்பு ஏத்துவதற்காக அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுத்தவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். சரவணன் பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அசோக் குமார் என்பவருக்கும், பக்கத்து தெருவை சேர்ந்த சிலருக்கும் இடையே முன் பகை இருந்துள்ளது.

 

தன் எதிரிகளை வெறுப்பேற்றும் விதமாக அரிவாள் வைத்தவாறு போட்டோ எடுத்து அசோக்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்து மது அருந்தி விட்டு சென்று கொண்டிருந்த சிவக்குமாரை பின்தொடர்ந்து சென்று வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon