--- --:--:-- --

பக்கத்து வீட்டுக்குள் அரைநிர்வாணமாக நுழைந்த அதிமுக முன்னாள் எம்பி..!

3

பக்கத்து வீட்டுக்குள் அரைநிர்வாணமாக நுழைந்த அதிமுக முன்னாள் எம்பி வீட்டு உரிமையாளரை தாக்கியுள்ளார். காயமடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதிமுகவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரை நீலகிரி எம்பியாக பதவி வகித்தார். இவர் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீடான கோபியின் வீட்டுக்குள் குடிபோதையில் சென்ற கோபாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த கோபி, கிஷோர் ஆகியோர் கோபாலகிருஷ்ணனை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன் குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதிமுக முன்னாள் எம்பியை மிரட்டியது தொடர்பாக கோபி குன்னூர் போலீசார் கைது செய்தனர். அதே வேளையில் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீது ஆபாசமாக நடப்பது, கொலை மிரட்டல் விடுத்தது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon