போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன்கான் ஆஜர்..!
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்து இருக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பை போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார் கடந்த மாதம் 12ம் தேதி கோவா சென்று சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.
போதை பொருள் பயன்படுத்துவதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். ஆர்யன்கானிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்படவில்லை என்றாலும் போதை மருந்து கடத்தும் கும்பலிடம் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தகவல் பரிமாற்றம் மூலம் தெரியவந்ததாக போதை மருந்து தடுப்பு பிரிவினர் கூறினர்.
இந்தநிலையில் இருபத்தி இரண்டு நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு ஆர்யன்கானுக்கு கடந்த 30ஆம் தேதி நிபந்தனை பிணை வழங்கப்பட்டது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.






