பெட்ரோல் டீசல் விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!
புதுச்சேரி மாநில அரசு தீபாவளி பரிசாக வாட் வரியை குறைத்து உள்ளதால் பெட்ரோல் விலை 13 ரூபாய் வரையிலும், டீசல் விலை 19 ரூபாய் வரையிலும் குறைந்து விற்பனையாகிறது. புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 107 ரூபாய் 79 காசுகளுக்கும், டீசல் 102 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனையானது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் வரையிலும் குறைத்து அறிவித்தது. இதையடுத்து தீபாவளி பரிசாக புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில் 7 ரூபாய் வரை வாட் வரியை குறைத்து முதல்வர் ரங்கசாமி காலர் வைத்தார்.
இதனால் புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசுகள் குறைந்து 94 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 19 ரூபாய் குறைந்து 83 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.






