--- --:--:-- --

இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு..!

1

இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த ஒத்துழைப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செயலாளர் ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார்.

 

மாநாட்டில் பங்கேற்க ஸ்காட்லாந்து சென்ற பிரதமர் மோடி மாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம் பெற்றவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

 

இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத குழுக்களை ஒழிப்பது குறித்து இரு தலைவர்களும் பேசியதாகவும் இந்த விவகாரத்தில் தேவையான ஒத்துழைப்பை தருவதாக போரிஸ் ஜான்சன் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

 

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை குறித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக வேண்டும் என்ற போராட்டம் நடத்திவரும் சில குழுக்கள் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon