ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொரொனா பரவலால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு..!
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரொனா பரவலால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரொனா உயிரிழப்புகள் தொடர்பான உண்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்புகளை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக்சிஜன் மற்றும் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் வாசலில் பலநூறு மக்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பல மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






