சிக்கன் கிரேவி சாப்பிட்டு மகள் தாய் உயிரிழக்கவில்லை..! திடீர் திருப்பம்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய் மகள் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து மகனுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி தங்கப்பன் நகரை சேர்ந்த இளங்கோவனின் மனைவி கர்ப்பகம் மற்றும் மகள் தர்ஷினி ஆகியோர் கடந்த 12ஆம் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு விட்டு குளிர்பானத்தை குடித்த நிலையில் உயிரிழந்தனர்.
இதுகுறித்த விசாரணையில் உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து கர்பகத்தின் செல்போனை ஆய்வு செய்தபோது அவருடைய வீட்டின் அருகில் வசிக்கும் வீரபெருமாள் என்ற நபர் கர்ப்பக்கத்துடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி தன்னுடன் இருக்குமாறு மிரட்டியது தெரியவந்தது.
இதனால் அவமானத்துக்கு பயந்து கற்பகம் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதையடுத்து வீரப்பெருமாளை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







