23 மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா – இலங்கை மீனவர் இடையேயான நீண்டகால பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.







