--- --:--:-- --

பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவல்..!

9

பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த புதன்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

லேசான காய்ச்சல் மற்றும் நெஞ்சு எரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியான அறிக்கையில் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon