--- --:--:-- --

முககவசம் அணியாவிட்டால் அபராதம்..!

1

சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்கும்படி மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

அதன்படி வணிக வளாகங்கள், அங்காடிகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கூடுவதை தவிர்த்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

 

பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொருவரும் கொரொனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Right Menu Icon