--- --:--:-- --

ஆயுத பூஜை -சரஸ்வதி பூஜை வழிபாடு சிறப்பு..

cgdcg

னிதர்களின் வாழ்க்கைக்கு கல்வி, செல்வம், வீரம்  இவை மூன்றும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்கு  தெய்வங்களான கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று பெண் தெய்வங்களை வழிபடுகிறோம். 

 

இதன்படி கல்விக்கு  மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், வீரத்திற்கு மூன்றுநாட்கள் என  ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவி தெய்வங்களுக்கு வழிபாடு செய்கின்றோம்.இவ்வாறு நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு மூன்று பேரும் தெய்வங்களான  துர்கா,சரஸ்வதி, லட்சுமியை வணங்குவதற்காகவே இந்த நாட்கள்.சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

 

வருடம்  முழுவதும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும்  உழைத்து பெற்று, அதற்கு உதவி செய்யும் தெய்வங்களான  ஸ்ரீமகாலட்சுமியையும், கல்வியையும் அறிவையும் தரக்கூடிய யாக தேவதையான  ஸ்ரீசரஸ்வதி தேவியையும், உடல் வலிமைக்கும் ஸ்ரீ துர்க்கா தேவியையும்  வழிபடுவதற்காக  ஏற்படுத்தப்பட்ட பண்டிகை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகும்.

 

கல்விக்கண் திறக்கும் சரஸ்வதி தேவி …

கலைமகள் சரஸ்வதியை  விக்கிரகம் வைத்து, படம் வைத்து  வழிபடுகிறார்கள். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்கலாம். படிக்கும் குழந்தைகள்  வீட்டில் இருப்பின்  பாடநூல்களை  பூஜையில் வைத்து வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், சர்க்கரை பொங்கல், பொரி, சுண்டல் ஆகியவை வைத்து பின்னர் நெய்தீபம் காட்டி வழிபட வேண்டும்.

 

சரஸ்வதி  தேவியை வணங்குவதால் கல்வி ஞானம், நினைவாற்றல், பல்வேறு கலைகள் ஆகியவற்றை  வேண்டிநிற்கும் திருநாளாகும் கல்விக்கண் திறப்பவர்  அன்னை  சரஸ்வதி தேவியே …
இந்நாளில் மக்கள் தாங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து ஆயுதங்களையும் சுத்தம் செய்து பின்னர் பூஜை செய்ய வேண்டும் .

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் அடுப்பு, பீரோ, அரவை இயந்திரம், கத்தி, சில இரும்பு கருவிகள் ஆகியவை நாம் பெறுவதற்கு  தகுதியை முப்பெரும் தேவியர் நமக்கு அளித்ததற்கு  நன்றியை வெளிப்படுத்துவதற்கு வணங்குவதுதான் நமது ஐதீகம்.

 

தொழிலுக்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்து  வழிபடுகிறார்கள் ஆயுத பூஜை அன்று வீடு, கடைகள், வாகனங்கள்  போன்றவற்றை சுத்தம் செய்த  பின்னர் அவற்றிற்கு சந்தனம், குங்குமப்பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

 

பூஜையின் போது கடலைப் பொரி, ஆப்பிள், திராட்சை, பேரிச்சம்பழம், வெல்லம், சர்க்கரை பொங்கல், அவல், சுண்டல்  போன்றவை படைத்து வழிபாடு செய்யலாம்.”செய்யும் தொழிலே தெய்வம்” என்பதற்கேற்ப தொழிலுக்கு உதவியாக இருந்த ஆயுதங்களை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது இந்நாளின் சிறப்பு பூஜை வைத்து வழிபட வேண்டும்.

கோவில்களில் கொலு வைத்து, கொலு பார்க்க வரும் பக்தர்களுக்கு  சுண்டல், சர்க்கரை பொங்கல்  கொடுத்து  மகிழ்ச்சி  படுத்த வேண்டும். சரஸ்வதி  தேவிக்கு வெள்ளை நிற ஆடை உடுத்தி   பூஜை செய்வது சிறப்பு. வீட்டில் பூஜை செய்துவிட்டு பின்னர் கோவில்களுக்கு சென்று  வழிபாடு செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக அம்மனை வழிபாடு செய்வது அனைத்து சக்திகளின் ஆற்றலையும் பெறலாம் என்பதே ஐதீகம்.

 

மக்கள் அனைவருக்கும்  குற்றம் குற்றமே வார இதழ் மற்றும் இணையதளம் சாா்பில், ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை  நல்வாழ்த்துக்கள்..

Leave a Reply

Right Menu Icon