மனநோயாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை லட்சுமி மேனன்..!
நடிகை லட்சுமிமேனன் தற்போது முதல் தடவையாக ஒரு படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமிமேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழு ஏஜிபி என படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது திகில் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. லட்சுமிமேனன் தற்போது முதல் தடவையாக மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.







