சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாயும் மகளும் உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய்-மகள் உயிரிழந்தனர். கண்ணப்பன் நகரை சேர்ந்த இளங்கோவனின் மனைவி கற்பகம் மற்றும் அவரது மகள் மகாலட்சுமி ஆகியோர் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அப்பொழுது அவர்களுக்கு லேசான எரிச்சல் ஏற்பட அருகில் உள்ள கடையில் இருந்து பத்து ரூபாய் மதிப்புள்ள குளிர்பானம் வாங்கிக் கூடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.







